உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கலைக்கல்லுாரியில் 23ல் பட்டமளிப்பு விழா

அரசு கலைக்கல்லுாரியில் 23ல் பட்டமளிப்பு விழா

வால்பாறை: வால்பாறை, அரசு கலைக்கல்லுாரியில் வரும், 23ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.வால்பாறை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் அறிக்கை வருமாறு:வால்பாறை அரசு கலைக்கல்லுாரியின், 15வது பட்டமளிப்பு விழா, வரும், 23ம் தேதி நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு நடக்கும் விழாவில், கல்லுாரி கல்விஇயக்ககம் இணை இயக்குனர் ராமன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். 2022-----23ம் கல்வியாண்டில் படித்த, 220 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர் காலை, 10:00 மணிக்கு முன்பாக, விழாவில் ஓதுக்கப்பட்ட இருக்கைகளில் அமரவேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ