மேலும் செய்திகள்
'மாணவர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும்'
09-Aug-2025
ராமகிருஷ்ணா கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
22-Aug-2025
கோவை; கோவை நவஇந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் செயல்படும் ஜே.டி.கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது. தமிழக அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ட்ரொட்ஸ்கி மருது சிறப்புரையாற்றினார். அவரது உரை, படைப்பாற்றல், மீள்தன்மை மற்றும் உறுதியுடன், தங்கள் எதிர்கால பயணத்தை மாணவர்கள் துவங்க வழிகாட்டுவதாக அமைந்திருந்தது. தொடர்ந்து 2021, 2022ல் மாணவர்கள் பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இந்துஸ்தான் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்கள் சரஸ்வதி மற்றும் பிரியா, ஜே.டி. கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சம்ஜித் தனராஜன், ஜே.டி. கல்வி நிறுவனத்தின் வி.எப்.எக்ஸ். தலைவர் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
09-Aug-2025
22-Aug-2025