மேலும் செய்திகள்
'புதிய முயற்சிகளை தொடர வேண்டும்'
06-Jan-2025
கோவை; துடியலுார், வட்டமலைபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், 27வது பட்டமளிப்பு விழா நடந்தது.எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளையின், நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். பெங்களூரு, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 562 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். அவர் பேசுகையில், ''எதிர்வரும் காலங்களில் விண்வெளி மற்றும் ஆராய்ச்சித் துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளதால், அதற்கேற்ப மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.முதல் மதிப்பெண பெற்ற, ஆறு மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் மற்றும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரியின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், முதல்வர் சவுந்தர்ராஜன், துணை முதல்வர் கருப்புசாமி மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
06-Jan-2025