உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ராமகிருஷ்ணா பிசியோதெரபி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பிசியோதெரபி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா பிசியோதெரபி மருத்துவக் கல்லுாரியின், 33வது இளங்கலை பிசியோதெரபி மற்றும் 25வது முதுகலை பிசியோதெரபி பட்டமளிப்பு விழா நடந்தது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின், தேசிய கூட்டு சுகாதாரப் பணிகள் ஆணையத்தின் தலைவர் டாக்டர் அண்ணாமலை பங்கேற்றார். 49 இளங்கலை மற்றும் 29 முதுகலை பிசியோதெரபி பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள், 52 கல்விசார் சிறப்பு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. முதுகலை பிரிவில் மாணவி காருண்யா, இளங்கலை பிரிவில் மாணவி கனிஷ்கா, சிறந்த வெளிச்செல்லும் மாணவர்களுக்கான விருதை தட்டிச் சென்றனர். 2020ம் ஆண்டுக்கான சிறந்த பிசியோதெரபி பயிற்சியாளர் விருதை, கவுதம் பெற்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் சீதாராமன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ