மேலும் செய்திகள்
இலக்குகளை அடைய தேவையான குணநலன்கள்!
03-Mar-2025
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், 21ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் சேதுபதி, தலைமை வகித்தார். விழாவில், 576 இளங்கலை மாணவர்கள், 148 முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர்.மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய, பெங்களூரு, அமிட்டி பல்கலை துணை வேந்தர் சுபாகர் பேசுகையில், ''சுய தொழில் கற்றால், வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமையும். பிரச்னைகளை எதிர்கொள்ளுதல், குழுவாகச் சேர்ந்து பல பணிகளை மேற்கொள்ளுதல், சூழலுக்கு ஏற்றாற்போல் தகவமைத்துக்கொள்ளுதல், தலைமைப்பண்பு, நேர மேலாண்மை உள்ளிட்ட தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.விழாவில், துணைத்தலைவர் வெங்கடேஷ், செயலாளர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி, பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
03-Mar-2025