உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த பச்சைக்கொடி

சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த பச்சைக்கொடி

பெ.நா.பாளையம்: கோவை மாவட்ட விவசாயிகள் மண்ணில் குறைவாக உப்பு தன்மையை ஏற்படுத்தும், சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம் என, வேளாண் துறை அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில் காரிப் பருவ பயிர் சாகுபடிக்காக யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்டவை, 11ஆயிரத்து, 766 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.பன்னாட்டு சந்தையில் டி.ஏ.பி., விலை அதிகமாக உள்ளதால், டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக கால்சியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கிய சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்.எண்ணெய் வித்து பயிர்களில், டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தும் போது, மகசூல் அதிகரித்து எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது. டி.ஏ.பி., உரமானது மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.அதேசமயம் சூப்பர் பாஸ்பேட் உரம், டி.ஏ.பி., உரத்தை விட குறைவாக உப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. எனவே, டி.ஏ.பி.,க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை