உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன்கடை புகார்களை கூற 25ல் குறைதீர் கூட்டம்

ரேஷன்கடை புகார்களை கூற 25ல் குறைதீர் கூட்டம்

- நமது நிருபர் -ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கடைகளில் உள்ள குறைகளை சரிசெய்து கொள்ள, சிறப்பு குறைதீர் கூட்டம், தாலுகா அளவிலான வட்டவழங்கல் அலுவலகங்களில் வரும் 25ல் நடக்கிறது.பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று, கோவை மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் செயல்படும், வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது.அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் வரும், 25ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, பொதுவினியோகத்திட்ட குறைதீர் சிறப்பு முகாம், அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும்.இம்முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், நகல்குடும்ப அட்டை, மொபைல் எண் மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் போட்டோ மாற்றம் தொடர்பான குறைகளை, மனுக்களாக வழங்கி மக்கள் பயனடையலாம், என, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.* இதேபோன்று, திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாகளிலும், வரும் 25ம் தேதி, ரேஷன் கார்டுதாரர்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.அவிநாசியில் அ.குரும்பபாளையம், தாராபுரம்- - சூரியநல்லுார், காங்கயம் -- எல்லப்பம்பாளையம்புதுார், மடத்துக்குளம்- - பாலப்பம்பட்டி, திருப்பூர் வடக்கு- - நெருப்பெரிச்சல், திருப்பூர் தெற்கு - விஜயாபுரம், உடுமலை- - சின்ன வீரம்பட்டி, ஊத்துக்குளி - கே.274 ஊத்துக்குளி ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும்; பல்லடத்தில், பணிக்கம்பட்டி ஊராட்சி அலுவலக இ-சேவை மையத்திலும் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.காலை, 10.00 மணி முதல் மதியம், 01.00 மணி வரை நடைபெறும் முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று, பொது வினியோகம் சார்ந்த மனுக்களை பெறுகின்றனர்.முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்வதற்கான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ