உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காரமடைக்கு யானைகள் வராமல் தடுக்க குழுக்கள்

 காரமடைக்கு யானைகள் வராமல் தடுக்க குழுக்கள்

காரமடை டிச. 17--: காரமடையில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, யானைகள் வராமல் இருக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் அன்னூர் காக்காபாளையம் பகுதியில், அண்மையில் தைலமரத் தோப்பில் மூன்று ஆண் காட்டு யானைகள் முகாமிட்டன. பின் இந்த யானைகள் மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இதனை வனத்துறையினர், ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணித்தனர். நேற்று முன் தினம், காரமடை கட்டாஞ்சி மலையில் யானைகள் தஞ்சம் அடைந்தன. நேற்று பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதிக்குள் சென்றது. காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், யானைகள் மீண்டும் காரமடை வனப்பகுதிக்கு வந்து ஊருக்குள் வந்துவிடாமல் இருக்க, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். கோப்பனாரி, கட்டாஞ்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 5 குழுக்கள் வாயிலாக யானைகளை கண்காணித்து வருகின்றோம், என்றனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !