தொடர் குற்றங்களில் ஈடுபட்ட இருவர் மீது குண்டாஸ்
கோவை: கே.கே.புதுாரை சேர்ந்த வன்னியராஜ், 35 மற்றும் நஞ்சம்மாள் வீதியை சேர்ந்த திவாகர், 28 ஆகியோர் சாய்பாபா காலனி பகுதியில் அடிதடி, வழிப்பறி போன்ற தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை மத்திய சிறையில் இருவரும், விசாரணை கைதிகளாக இருந்து வந்த நிலையில், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, பரிந்துரை செய்யப்பட்டது.மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.