உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளாவின் கோவில் நகரமாக குருவாயூரை மாற்ற வேண்டும்! அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேச்சு

கேரளாவின் கோவில் நகரமாக குருவாயூரை மாற்ற வேண்டும்! அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேச்சு

பாலக்காடு;கேரளாவின் கோவில் நகரமாக குருவாயூரை மாற்ற வேண்டும் என்று, தேவஸ்தானம் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தேவஸ்தானம் சார்பிலான திட்டப்பணிகளை அர்ப்பணிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், தேவஸ்தானம் நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார்.குருவாயூர் நகராட்சி தலைவர் கிருஷ்ணதாஸ் பங்கேற்றார். தேவஸ்தானம் நிர்வாக குழு உறுப்பினர்கள் மனோஜ், ரவீந்திரன், நிர்வாகி வினயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தேவஸ்தானம் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''கேரளாவின் கோவில் நகரமாக குருவாயூரை மாற்ற வேண்டும். தற்போது, இதற்கான 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இவ்விஷயத்தில் நகராட்சியின் முழு ஒத்துழைப்பு இருக்கும்,'' என்றார்.அமைச்சர் தலைமையில், தேவஸ்தானம் ஊழியர்களுக்காக கட்டப்படும் குடியிருப்புகளுக்கு பூமி பூஜை நடந்தது.தெற்கு நடையில், தொழிலதிபர் சுந்தர ஐயர் குடும்பம் கட்டியுள்ள தங்குமிடம் தேவஸ்தானத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும், மஞ்சுலால் பகுதியில் இருந்து மேற்கு சாலை, யானைகள் பராமரிப்பு மையத்தில் இன்டர்லாக் டைல் அமைக்கும் பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ