உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜிம் பயிற்சியாளர் மர்ம சாவு

ஜிம் பயிற்சியாளர் மர்ம சாவு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜிம் பயிற்சியாளர், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.நீலகிரி மாவட்டம், பாலடா, கல்லக்கொரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்,37; திருமணம் ஆகவில்லை. இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் தங்கி, ஜிம் பயிற்சியாளராக இருந்தார். நேற்று முன்தினம் தந்தை சுந்தரராஜன், சதீஷ்குமாருக்கு போன் செய்துள்ளார். போன் எடுக்காததால், உறவினரிடம் சொல்லி சதீஷ்குமார் அறைக்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். உறவினர் சென்று பார்த்த போது, மயங்கிய நிலையில் இருந்த சதீஷ்குமாரை, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சதீஷ்குமார் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை