உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஐயப்பன் பூஜா சங்கத்தில் ஹரிஹரபுத்ர ஹோமம்

 ஐயப்பன் பூஜா சங்கத்தில் ஹரிஹரபுத்ர ஹோமம்

கோவை: ராம்நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின், 75 ம் ஆண்டின் மஹோத்ஸவ விழாவை முன்னிட்டு, கடந்த 24 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை சிறப்பு ஹோமம் மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.நேற்று காலை, 7:00 மணி முதல் 12:30 மணி வரை ஹரிஹரபுத்ர மூல மந்திரஹோமம், புருஷ சூக்த ஹோமம், சாந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், ஸ்வயம்வரா பார்வதி ஹோமம், அன்னதானம் மற்றும் மகா பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. இது குறித்து, ஐயப்பன் பூஜா சங்க தலைவர் கணேசன் கூறியதாவது: இந்த சங்கம், 1950 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது சங்கத்தின், 75 ஆண்டு விழா என்பதால், ஒவ்வொரு நாளும் சிறப்பு ஹோமங்கள் செய்யப்படுகின்றன. மாலை நேரங்களில் பக்தி இசை நிகழ்சசிகள் நடக்கின்றன. நாளை காலை, 11:15 மணிக்கு புஷ்பாஞ்சலி 18 வகை பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இறுதிநாள் சிறப்பு நிகழ்ச்சியாக யானை ஊர்வலம் நடக்கிறது. ஐந்து நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. கோவை ராம்நகரின் அடையாளமாக விளங்கும் ஐயப்பன் பூஜா சங்கம், பல்வேறு பொது சேவைகளுயும், கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.... படம் பிரவீணா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ