அரசு கேபிள் ஆபரேட்டருக்கு எச்.டி., பாக்ஸ் வினியோகம்
- நமது நிருபர் -அரசு கேபிள் ஆபரேட்டர்களுக்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ் வினியோகம் நேற்று துவங்கியது.திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் இணைப்புகளுக்கு வழங்குவதற்காக 6 ஆயிரம் எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் வந்துள்ளன. அவை, கலெக்டர் அலுவலக முதல் தளத்திலுள்ள அரசு கேபிள் டிவி அலுவலக அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.தனியார் நிறுவனங்களைவிட குறைந்த கட்டணம், துல்லியமான பட காட்சி மற்றும் எச்.டி.எம்.ஐ., கேபிள் மூலம் அனைத்து புதிய மாடல் 'டிவி'க்களிலும் இணைக்கும் வசதி காரணமாக, பழைய எஸ்.டி., பாக்ஸிற்கு பதிலாக, எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்த மக்கள் ஆர்வமாக உள்ளனர்.இதை உணர்ந்து, அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், கட்டணம் செலுத்தி, எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை பதிவு செய்ய துவங்கியுள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்த ஆபரேட்டர்களுக்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணி, நேற்றுமுதல் துவங்கியுள்ளது.எச்.டி., பாக்ஸ் தேவைப்படும் ஆபரேட்டர்கள், https://www.tactv.inஎன்ற தளத்தில், கட்டணம் செலுத்தி பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.