உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குவியல் குவியலாக போதை ஊசி மருந்து பல்லடம் அருகே அதிர்ச்சி

குவியல் குவியலாக போதை ஊசி மருந்து பல்லடம் அருகே அதிர்ச்சி

பல்லடம், : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரைப்புதுார் ஊராட்சி, சின்னக்கரை பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில், ஊசியுடன் கூடிய நுாற்றுக்கணக்கான சிரஞ்சுகள் மற்றும் போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் உள்ளிட்டவை குவியல் குவியலாக கிடக்கின்றன. இந்திய மருத்துவர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் கூறுகையில், ''வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டாக்டர்களின் பரிந்துரைப்படி மட்டுமே இவற்றை வழங்க வேண்டும். ஆனால், ஆன்லைனில் தடையின்றி கிடைப்பதால்தான் இந்த அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், உயிருக்கே அபாயம் உள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K.n. Dhasarathan
ஜூலை 23, 2024 16:08

அடுத்த கள்ளக்குறிச்சியா, பல்லடமா ? அங்கிருக்கும் காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக செயல் பட்டு, பெரும் நிகழ்வுக்கு முன் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் .


Kumar Kumzi
ஜூலை 23, 2024 13:53

இது தான்யா விடியல் ஆட்சியின் சிறப்பம்சம் ஓவாவுக்கு ஒட்டு போட்டு கொண்டாடுங்கோ கொத்தடிமைங்களே


krishna
ஜூலை 23, 2024 11:59

KAIPULLA PERUMIDHAM THAMIZH NADU MAGIZCHI KADALIL.


loganathan
ஜூலை 23, 2024 10:09

வணக்கம், தான் கெட்டு போறம் என்று தெரிந்து போகிறவர்களை, நாம் திருத்த முடியாது, அவர்கள் எப்படியும் தன் குடும்பங்களை ஆதரவு இல்லாமல் விட்டு செல்வார்கள். மனைவி குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறிதான். மது போதைக்கு அடிமையாகி உள்ளவர்கள் தயவு செய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிடும்.


Barakat Ali
ஜூலை 23, 2024 10:04

நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களே காரணம். இருபது வயது முதல் முப்பத்தைந்து வயது வரையுள்ள இளைஞர்கள் இந்தியாவில் அதிகம் என்று அவ்வப்போது பெருமைப்படும் நமோவுக்கு யாரோ சரியான பதிலடி கொடுக்குறாங்க .....


Kumaresan
ஜூலை 23, 2024 09:39

பல்லடம் சுற்று வட்டாரத்தில் இதுபோல அதிகமாக உள்ளது. மருத்துவரே இல்லாமல் ஊசி போடும் மருந்து கடைகள் அதிகமாக உள்ளது. இது பல வருடங்களாக நடக்கிறது, சுகாதார துறை இதைப்பற்றி கண்டுகொள்வதில்லை. போதை மருந்து பாட்டில்களாகவும் கிடைக்கிறது.


ديفيد رافائيل
ஜூலை 23, 2024 09:37

தமிழ்நாட்டின் அவலம் ங்குற headlines ல நிறைய photos ? போடலாம்.


ديفيد رافائيل
ஜூலை 23, 2024 09:35

தமிழகம் முழுக்க இதே போல இருக்க தான் செய்யும்.


sridhar
ஜூலை 23, 2024 08:20

ஒரு அதிர்ச்சியும் இல்லை, இன்னும் நிறைய பார்க்க போகிறோம், எல்லாத்துக்கும் சேர்த்து தான் ஆயிரம் ருபாய்


ALWAR
ஜூலை 23, 2024 07:29

விடியல் அரசு வீட்டுக்கு ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை