உள்ளூர் செய்திகள்

இடியுடன் பெய்த கனமழை

வால்பாறை; வால்பாறையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த, 10 நாட்களாக சாரல்மழை மட்டுமே பெய்து வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு இடியுடன் கனமழை பெய்தது.இதனால், வால்பாறை முழுவதும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பி.ஏ.பி., அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.கனமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 150.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 170 கனஅடி நீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 349 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):சோலையாறு - 21, வால்பாறை - 3, பரம்பிக்குளம் - 2, ஆழியாறு - 10, மேல்நீராறு - 19, கீழ்நீராறு - 14, காடம்பாறை - 54, மேல்ஆழியாறு - 37, பெருவாரிப்பள்ளம் - 3, நவமலை - 14, பொள்ளாச்சி - 3 என்ற அளவில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை