காற்றுடன் கனமழை; மின் வினியோகம் பாதிப்பு
வால்பாறை, ; வால்பாறையில், காற்றுடன் கனமழை பெய்யும் நிலையில், மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.வால்பாறையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை மழை பரவலாக பெய்கிறது. காற்றுடன் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மண் சரிந்தும், மரம் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வெள்ளமலை எஸ்டேட் பகுதியில், மின் கம்பத்தின் மீது மரம் விழுந்தது. இதனால், வால்பாறை தாலுகா முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் வினியோகம் தடைபட்டது.தொடர் மழையால், வால்பாறையில் திரண்டுள்ள சுற்றுலா பயணியர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) விபரம் வருமாறு:சோலையாறு - 42, பரம்பிக்குளம் - 3, வால்பாறை - 17, மேல்நீராறு - 27, கீழ்நீராறு - 3, காடம்பாறை - 7, சர்க்கார்பதி - 20, துாணக்கடவு - 4, பெருவாரிப்பள்ளம் - 5, நவமலை - 9 என்ற அளவில் மழை பெய்தது.