உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வீஸ் ரோட்டில் இடையூறாக கனரக வாகனங்கள் நிறுத்தம்

சர்வீஸ் ரோட்டில் இடையூறாக கனரக வாகனங்கள் நிறுத்தம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு, ரயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் ரோட்டில், நிறுத்தி வைக்கப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பொள்ளாச்சி, கோட்டூர் பஸ் ஸ்டாப் அருகே, ரயில்வே மேம்பாலம் சுற்றுப்பகுதி கிராமங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. குறிப்பாக, கிராம மக்கள் மட்டுமின்றி, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணியரும், இந்த மேம்பாலத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால், இவ்வழித்தடத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்படும். இந்த பாலத்திற்கு ஏற்ப சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், வாகனங்கள் சென்று திரும்பும் சர்வீஸ் ரோட்டில், கனரக வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. மற்ற வாகனங்கள் செல்ல முடி-யாத நிலை உருவாகுகிறது. வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'வாகனங்கள் எளிதாக திரும்பும் வகையில் சர்வீஸ் ரோடு, விஸ்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. துறை ரீதியான அதிகாரிகள், சர்வீஸ் ரோட்டில் வாகன நிறுத்தத்தை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி