உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொடிசியா கண்காட்சியில் மூலிகை நாப்கின்  அரங்கு

கொடிசியா கண்காட்சியில் மூலிகை நாப்கின்  அரங்கு

கோவை; கோவை கொடிசியா அரங்கில் துவங்கியுள்ள மூன்று நாள் கண்காட்சியில், இயற்கை முறையில் தயாரான மூலிகை நாப்கின் அரங்கு, பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. கருந்துளசி, வேப்பிலை உள்ளிட்ட ஐந்து மூலிகையை கொண்டு, இயற்கை நாப்கின் வேல்ஸ்லி நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மூலிகை பொருட்களால் தயாரிப்பதால் ஈரப்பதம் எளிதல் உறிஞ்சுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன் சமநிலை பெறுகிறது. இதன் அறிமுக நிகழ்வு, கொடிசியா கண்காட்சியின் வேல்ஸ்லி அரங்கில் நடந்தது. நைட்டிங்கேல் கல்வி நிறுவனத்தின் மனோகரன் ரிப்பன் வெட்டி அரங்கை துவக்கி வைத்தார். வேல்ஸ்லி நிறுவன உரிமையாளர்கள் சந்திரசேகர், நவனீதா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இன்றும், நாளையும் கொடிசியா அரங்கில் நடைபெறும் கண்காட்சியில், இயற்கை நாப்கின் பொதுமக்கள் வாங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை