மேலும் செய்திகள்
நலம் பேச இணைவோம்! இணையவழியில் நாளை நடக்கிறது
25-Aug-2025
கோவை: புற்றுநோய் பற்றி நமக்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். நமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூட இந்த நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சம் இருக்கும். புற்றுநோய் வரும் முன் என்ன செய்யலாம், வந்த பின் செய்ய வேண்டியவை என்னென்ன? புற்றுநோயை எந்த அளவுக்கு குணப்படுத்தலாம், புற்று நோய் அறிகுறிகள், தடுப்பு முறைகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், உணவு முறைகள் என, புற்றுநோய் சார்ந்த அனைத்து சந்தேகங்களுக்கும், உங்களுக்கு பதில் கிடைக்கும். 'தினமலர்' நாளிதழ், கே.எம்.சி.ஹெச்., சார்பில், 'நலம் பேசுவோம், நலமுடன் வாழ்வோம்' இணைய வழி கருத்தரங்கு, இன்று காலை 11 மணி முதல் நடக்கிறது. இந்த கருத்தரங்கில் உங்கள் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்படும். புற்றுநோய் குறித்த சந்தேகங்களை, 87549 87509 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு, காலை 10 மணிக்குள் அனுப்புங்கள். கே.எம்.சி.ஹெச்., கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சுப்ர மணியம், மருந்தியல் பு ற்று நோய் சிகிச்சை நிபுணர் விக்னேஷ் கந்த கு மார், ரத் தம் மற்றும் புற்றுநோ ய் சிகிச்சை நிபுணர் ராஜசேகர் ஆகியோர் விளக்குகின் றனர். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அளிக்கும், இந்த இணைய வழி கருத்தரங்கு, 'தினமலர்' சமூக வலைதளத்தில் காணொலி வாயிலாக ஒளிபரப்பாகும். இதனை, http://dmrnxt.in/nalamhttp://dmrnxt.in/nalam என்ற இணைய பக்கத்தில் பார்வையிட லாம்.
25-Aug-2025