உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்ணாமூச்சி காட்டும் முதலை

கண்ணாமூச்சி காட்டும் முதலை

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட தென்னம்பாளையம் மற்றும் மோத்தேபாளையம் பகுதியில் விவசாய கிணற்றில் ஒரு முதலையும், குட்டையில் ஒரு முதலையும் தென்பட்டது.இதனை உறுதி செய்த சிறுமுகை வனத்துறையினர், சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையில் முதலைகளை பிடிக்க முயன்றனர்.அப்போது, கிணற்றில் இருந்த முதலை அருகில் உள்ள குட்டைக்கு சென்றது. குட்டைக்கு சென்ற பின் தென்படவில்லை. அதே போல் மோத்தேபாளையம் குட்டையில் தண்ணீர் முழுவதுமாக எடுக்கப்பட்டு, நெட் அமைத்து முதலையை வனத்துறையினர் தேடினர். ஆனால் முதலை கிடைக்கவில்லை. இந்த இரு முதலைகளும் அருகில் உள்ள கிணறு அல்லது குட்டைகளுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், மோத்தேபாளையம், தென்னம்பாளையம் குட்டைகளில் முதலைகள் தென்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து அவற்றை தேடினோம். ஆனால், கிடைக்கவில்லை. அவை அருகில் உள்ள கிணறுகள், குட்டைகளில் சென்றிருக்கலாம். அந்த இடங்களில், வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை