உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காஸ் சிலிண்டருக்கு அதிக தொகை வசூல்

காஸ் சிலிண்டருக்கு அதிக தொகை வசூல்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில், சிலிண்டர் கொள்முதலுக்கு அதிக தொகை வசூலிப்பது குறித்து புகார் கூட்டம் நடந்தது.கிணத்துக்கடவு பகுதியில், சமையல் காஸ் சிலிண்டருக்கு அதிக தொகை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கணேஷ்பாபு மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் அனுசியா தலைமையில், புகார் தொடர்பான கூட்டம் நடந்தது. இதில், சிலிண்டர் ஏஜன்சி உரிமையாளர், பணியாளர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.சமையல் காஸ் சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதுடன், வீட்டில் வயதானவர்கள் இருந்தால் சிலிண்டர் மாட்டித்தருவது இல்லை. பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என புகார் அளிக்கப்பட்டது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.காஸ் ஏஜன்சி சார்பில் பேசும்போது, 'இது போன்று இனிமேல் நடக்காது,' என தெரிவித்தனர். இதையடுத்து, இப்பிரச்னை குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என, காஸ் ஏஜன்சி நிர்வாகிகளை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை