உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.5 கோடி உயர் ரக கஞ்சா கேரள பயணியிடம் சிக்கியது

ரூ.5 கோடி உயர் ரக கஞ்சா கேரள பயணியிடம் சிக்கியது

கோவை:கோவை விமான நிலையத்தில், கேரள பயணியிடம், 5 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா சிக்கியது.சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில், பயணி ஒருவர் உயர் ரக கஞ்சா கடத்தி வருவதாக, வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்படி, சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த பயணியரை சோதனை செய்தபோது, ஒருவரிடம் உயர் ரக 'ஹைடிரோபோனிக்' கஞ்சா இருந்தது.விசாரணையில், அவர், கேரள மாநிலம், கோழிக்கோடை சேர்ந்த முகமது பாசில், 24, என்பதும், பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியே கோவை வந்ததும் தெரியவந்தது.அவரிடம் இருந்த, 5.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !