உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி; சச்சிதானந்தா பள்ளி வெற்றி

மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி; சச்சிதானந்தா பள்ளி வெற்றி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும், சி.பி.எஸ்.இ., தெற்கு மண்டல ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், சச்சிதானந்த பள்ளி மாணவ, மாணவியர் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே, தெற்கு மண்டல -1, ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள், மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் நடைபெற்று வருகிறது.இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான ஹாக்கி போட்டிகள் நடக்கின்றன. தமிழ்நாடு, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் ஆகிய மாநிலங்களில் இருந்து, 56 பள்ளிகளைச் சேர்ந்த, 1,854 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில், போட்டிகள் நடைபெறுகின்றன. 22ம் தேதி துவங்கி, 26ம் தேதி முடிய போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு, ஆட்டநாயகன் விருதுகள் வழங்கப்பட உள்ளன.முதல் நாள் நடந்த, 14 வயது உட்பட்ட மாணவர் பிரிவு போட்டிகளில், சென்னை லாலாஜி பள்ளி, 3:1, கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி, 9:0, சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளி, 2:0, கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி,1:0, தெலுங்கானா பீராம் ஸ்ரீதர் ரெட்டி பள்ளி,1:0, தர்மபுரி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி,4:1, திருச்சி எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளி, 3:0, ஊட்டி லாரன்ஸ் பள்ளி,1:0 கூடலூர் அரிஸ்டோ பள்ளி, 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றன.மாணவியர், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் அரியலூர் ராம்கோ வித்யா மந்திர் பள்ளி,1:0, ஹைதராபாத் பப்ளிக் பள்ளி, 4:0 கல்லாறு சச்சிதானந்த ஜோதி பள்ளி,4:0, சென்னை ஐ.சி.எப்., வித்யா நிகேதன் பள்ளி, 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றன.17 வயது மாணவர் பிரிவில், சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, 2:0, என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 19 வயது மாணவர் பிரிவில் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி, 5:0, கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளி, 3:0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இரண்டாம் நாள் நடந்த, 14 வயது மாணவர் போட்டியில், கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி,5:0, கோல் கணக்கிலும், 17 வயது பிரிவில் அரியலூர் ராம்கோ வித்யா மந்திர் பள்ளி, 1:0 நெய்வேலி ஜவஹர் பள்ளி, 3:0 என்ற கோல் கணக்கிலும், 19 வயது பிரிவில் சென்னை லாலாஜி பள்ளி,1:0 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்றது.14 வயது மாணவியர் பிரிவில், மதுரை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, 1:0, கோல் கணக்கிலும், 19 வயது பிரிவில் சென்னை கே.கே.நகர் பி.எஸ்.பி.பி., பள்ளி, 7:0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை