உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிராண்ட் கோயம்புத்தூர் அம்பாசடர் விருது வழங்கி கவுரவம்

பிராண்ட் கோயம்புத்தூர் அம்பாசடர் விருது வழங்கி கவுரவம்

கோவை: கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை, தி அட்வர்டைசிங் கிளப் மற்றும் பி.எஸ்.ஜி., குழுமம் சார்பில், பிராண்ட் கோயம்புத்தூர் அம்பாசடர்விருது வழங்கும் விழா நடந்தது.இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுந்த் தலைமை வகித்தார். கோவை, தி அட்வர்டைசிங் கிளப் தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.இதில், லெகஸி பிராண்ட் பிரிவில் பிரீமியர் குழும நிறுவனர் ஜெகதீஷ் சந்திரன், கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் இயக்குனர் கவுதம் ராம் ஐகானிக் பிராண்ட் (கோவை) விருது, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் ஐகானிக் பிராண்ட் (கோவை மண்டலம்) விருது, கே.எம்.சி.எச். தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி பிராண்ட் அம்பாசிடர் விருது, பிராமினன்ஸ் விண்டோஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் எமர்ஜிங் பிராண்ட் விருதினையும் பெற்றனர்.விழாவில், டி.வி.எஸ். சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவன தலைவர் தினேஷ், பல்வேறு தொழில் நிறுவனங்களின் இயக்குனர்கள், நிர்வாக அறங்காவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ