உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகை திருட்டு

சூலுார்; சூலுார் அடுத்த இடையர்பாளையம் கிருஷ்ணா கார்டனை சேர்ந்தவர் ராகேஷ், 40. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 12ம் தேதி ராகேஷின் மனைவி சூர்யா, வீட்டை பூட்டி விட்டு, குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றார்.நேற்று முன்தினம் இடையர்பாளையம் திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த, 13 சவரன் நகை திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாரிடம் அவர் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சுல்தான் பேட்டை போலீசார், நகை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை