மைதானம் புதராக இருந்தா எப்படி விளையாடுவாங்க?
நெகமம், ; நெகமம், பெரியகளந்தை விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி புதர் சூழ்ந்து இருப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நெகமம், பெரியகளந்தை பகுதியில் தாசநாயக்கன்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள, விளையாட்டு மைதானம் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து இருப்பதுடன், முட்புதர் சூழ்ந்துள்ளது.இதனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இங்கு விளையாட முடியாமல், ரோட்டிலேயே விளையாடி வருகிறார்கள்.மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கவும், திறமையை வெளிப்படுத்தவும் மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், அரசு சார்பில் ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், இதை முறையாக பராமரிக்காததால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், விளையாட்டு மைதானத்தை சூழ்ந்துள்ள புதரை அகற்றி, விளையாட்டு உபகரணங்களை புதுப்பிக்க வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.