உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரு கல்லுாரியில் ஹெச்.ஆர்., கனெக்ட்

நேரு கல்லுாரியில் ஹெச்.ஆர்., கனெக்ட்

கோவை; நேரு தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில் கல்லூரி வளாகத்தில், சி.ஐ.ஆர்.சி.ஏ., அமைப்பு மற்றும் என்.சி.பி.ஐ.ஆர்., அமைப்பு சார்பில், ஹெச்.ஆர்., கனெக்ட்-2025 நிகழ்வு நடந்தது.ரூட்ஸ் குழுமங்களின் இயக்குனர் கவிதாசன், திறன் மேம்பாட்டின் அவசியம் குறித்தும், விவசாயம், உணவுத்துறையில் திறன்மிக்கவர்களின் தேவைகள் குறித்தும் விளக்கினார். 16 தொழில்துறை நிறுவனங்களின் ஹெச்.ஆர்., பிரிவு நிபுணர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினர். உணவு பதப்படுத்தும் துறையில் வேலைவாய்ப்புகள், விமானம் மற்றும் கட்டட பொறியியல் துறையில் தேவையான திறன்கள், தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, வணிக கல்வி, தொழில்துறையின் எதிர்கால மாற்றங்கள் குறித்து, துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்கினர். நேரு குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், செயல் இயக்குனர் நாகராஜா, நேரு தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் சிவராஜா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நாகானந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை