உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனைவியை கம்பியால் தாக்கிய கணவர் கைது

மனைவியை கம்பியால் தாக்கிய கணவர் கைது

நஞ்சுண்டாபுரம்: போத்தனூர் நஞ்சுண்டாபுரம் மேற்கு தேவேந்திர வீதியை சேர்ந்தவர் பிலிப், 42; மனைவி லதாமேரி, 39. மதுப்பழக்கம் உடைய பிலிப், போதையில் மனைவி, மகள்களை தரக்குறைவாக பேசி, திட்டுவது வழக்கம். 18ம் தேதி இரவு போதையில் வீட்டுக்கு வந்த பிலிப் வழக்கம் போல திட்டியுள்ளார். இதுகுறித்து கேட்ட லதாமேரியை இரும்பு ராடால் தலையில் தாக்க முயன்றார். தடுத்த லதாமேரியின் இடது கை எலும்பு முறிந்தது. பிலிப் மனைவியை எச்சரித்துவிட்டு, வெளியே சென்றார். மருத்துவமனையில் சேர்ந்த லதாமேரி புகாரில், போத்தனூர் போலீசார் பிலிப்பை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை