மேலும் செய்திகள்
ஆரோக்கியம் காக்கும் உணவு முறை அவசியம்!
04-Oct-2024
தகவல் சுரங்கம் : உலக உணவு தினம்
16-Oct-2024
கோவை; திருக்குறள் கல்வி உலகம் கல்விச் சாலை சார்பில், 'உயிர் மேன்மைக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உணவின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கு கோவை விவேகானந்தர் கல்வி வளாகத்தில் நடந்தது.இதில் திருக்குறள் ஆய்வாளர் கணேசன் பேசியாதவது:'விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்' என்று பெரியவர்கள் சொல்வார்கள். திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் உணவின் முக்கியத்துவம் குறித்து சிறப்பாக கூறி இருக்கிறார். உணவு சாப்பிடுவதில் உண்ணுதல், தின்னுதல், அருந்துதல் என, மூன்று விதம் இருக்கிறது. உண்ணுதல் என்பது திட உணவையும், தின்னுதல் என்பது சிற்றுண்டியையும், அருந்துதல் என்பது திரவ உணவு உட்கொள்வதையும் குறிக்கிறது.இதில், எதை சாப்பிட்டாலும் தொண்டைக்கு கீழ் செல்லும் போது அந்த உணவு திரவமாகத்தான் உடலுக்குள் செல்ல வேண்டும். அதற்கு காரணம் உயிர் உற்பத்திக்கும், உணவு உற்பத்திக்கும், நீர்தான் ஆதாரமாக உள்ளது. அதனால் உயிர் மேன்மைக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உணவின் பங்கு முக்கியம். நோய் இன்றி வாழ உணவை மருந்தாக உட்கொள்ள வேண்டும் என்பதுதான் வள்ளுவர் நமக்கு கூறும் கருத்து.இவ்வாறு, அவர் பேசினார்.
04-Oct-2024
16-Oct-2024