உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / களத்தில் இறங்கினால் ஜெயிக்காமல் விடமாட்டார்!

களத்தில் இறங்கினால் ஜெயிக்காமல் விடமாட்டார்!

பெயர்: தயான் சிங். பிறந்த ஆண்டு: 29.8.1905 பிறந்த இடம்: உ.பி., மாநிலம் அலகாபாத் (பிரயாக்ராஜ்)

16 வயதில் ராணுவத்தில் இணைந்தார் தயான் சிங். அப்போதுதான் ஹாக்கி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. காலையில் ராணுவப் பணி, இரவில் விளக்குகள் இல்லாத மைதானத்தில் நிலவின் ஒளியில் பயிற்சி என, விளையாட்டில் ஈடுபட்டார். கடந்த 1928ல் ஆம்ஸ்டெர்டாம், 1932ல் லாஸ் ஏஞ்சல்ஸ், 1936ல் பெர்லின் ஆகிய இடங்களில் நடந்த ஒலிம்பிக்கில், இந்தியா தனது முதல் ஹாட்ரிக் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வெற்றியுடன் முடிக்க உதவியதில், முக்கிய பங்காற்றினார். அவற்றில் மட்டும் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 39. இவர் பங்கெடுத்த 19 வருட ஹாக்கி போட்டிகளில், 185 ஆட்டங்களில் பங்கேற்றார். அவற்றில் இவர் அடித்த ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கை 570.கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, களத்தில் பந்தை கடத்துவதில், அபார திறமை பெற்றவர். அவருடைய ஆட்டம் மற்றவர்களுக்கு ஒரு மாயாஜால காட்சியை போலவே தோன்றும். இந்திய ஹாக்கி உலகின் ஜாம்பவான், மேஜர் தயான் சந்த் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 29ம் தேதி(இன்று), 'தேசிய விளையாட்டு தினம்' கொண்டாடப்படுகிறது. 'சந்த் என்றால் இந்தியில் பிரகாசிக்கும் நிலவு என்று அர்த்தம். இதன் வாயிலாக தயான் சிங், தயான் சந்த் என்று அழைக்கப்பட்டார்.1956ம் ஆண்டில், இந்திய ராணுவத்தின் பஞ்சாப் படைப்பிரிவில் மேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்றபோது, அதே ஆண்டு, பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஹாக்கியின் பிதாமகனான தயான் சந்தின் பிறந்த தினமான இன்று, தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. தயான் சந்தின் பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை