மேலும் செய்திகள்
துணை சுகாதார நிலையம் சின்னதடாகத்தில் திறப்பு
1 minutes ago
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா குருபூஜை
1 minutes ago
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் நிறுவனர் நாள் விழா நடந்தது. விழாவுக்கு, பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி தலைமை வகித்தார். முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பள்ளியில், 25 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கும், உதவிய ஆசிரியர்களுக்கும், கே.எம்.சி.ஹெச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். பத்மஸ்ரீ கார்த்திகேயன், பள்ளி செயலர் கவிதாசன், முன்னாள் மாணவர்கள் ஸ்வேதா, கிருஷ்ணபிரசாந்த் ஆகியோர் பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதினையும், அஞ்சல் தலை சேகரித்த மாணவர்களுக்கு ஸ்ரீசேதுராமன் விருதினையும், கலாகார்த்திகேயன் வழங்கினார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
1 minutes ago
1 minutes ago