உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தியானம் செய்தால் கவலைகள் அகலும்

தியானம் செய்தால் கவலைகள் அகலும்

கோவை; சன்மார்க்கதரிசி அறக்கட்டளை மற்றும் இன்னர் லைட் பவுண்டேஷன் சார்பில், 'உள் ஒளி தியானம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு, ரேஸ்கோர்ஸில் நேற்று மாலை நடந்தது. இதில், இன்னர் லைட் பவுண்டேஷன் சேர்மன் குமார் கிருஷ்ணமூர்த்தி, ஆங்கிலத்தில் எழுதிய, 'உள் ஒளி பிரபஞ்சத் தியானம்' என்ற நூலின் விளக்கம் மற்றும் தியானம் என்பது என்ன என்பது குறித்து, குமார் கிருஷ்ணமூர்த்தி எடுத்துரைத்தார். இச்சொற்பொழிவில், குமார் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''தியானம் என்பது பாகற்காய் கசாயம் போல. குடிக்க யாருக்கும் விருப்பம் இருக்காது. ஆனால், அது உண்மையில் நல்ல பலன் கொடுக்கும். நமது அகம் என்ற தெய்வத்தை, நாம் முதலில் உணர வேண்டும். மனிதனின் வெளிப்புறத்தை காணாமல், உள் புறத்தை காண்பதே தியானமாகும். அதில் நாம் சரணாகதியானால், நமது கவலைகள் அனைத்தும் அகலும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ