| ADDED : மார் 13, 2024 10:40 PM
பொள்ளாச்சி, - பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், புதிதாக குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அப்போது, பாம்புகளை காணும் மக்கள், பாதுகாப்பு கருதி, அதனை அடித்து கொன்று விடுகின்றனர்.இதனால், பாம்புகள் கொல்லப்படுவது, மறைமுகமாக அதிகரித்துள்ளது. பாம்புகளின் விஷத்தன்மை, பாதுகாப்பு குறித்து தெரிந்து கொள்வது அவசியமென, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வனத்துறையினர் கூறியதாவது:குடியிருப்பு பகுதியை மக்கள் துாய்மையாக வைத்து கொள்ளுதல், புதர் மற்றும் செடி,கொடிகள் வளராமல் பராமரித்தால், பாம்புகள் நடமாட்டத்தை தவிர்க்க முடியும்.பாம்புகள், இரையை செயலிழக்க செய்வதற்காகவே, விஷத்தை பயன்படுத்துகிறது. வீடுகளிலோ அல்லது குடியிருப்பு பகுதிகளிலோ பாம்பு புகுந்து விட்டால், உடனே அதை அடித்து கொல்ல கூடாது. வனத்துறை அல்லது பாம்புகள் பிடிக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டு விடுவர்.இவ்வாறு, கூறினர்.