மேலும் செய்திகள்
கொசுக்களை விரட்ட நிரந்தர தீர்வு
2 minutes ago
கண்ணைக் கவரும் கலர்புல் பாத்ரூம்
3 minutes ago
டிஎன் ஸ்பார்க் புத்தகங்கள் வந்தாச்சு
4 minutes ago
மாவட்ட செஸ்:380 பேர் பங்கேற்பு
4 minutes ago
ஊர் முதற் பெருக்கம்
5 minutes ago
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:பகல் நேர வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், பனியின் தாக்கம் மிகவும் குறைந்துள்ளதாலும், இளநீர் சந்தை சூடுபிடித்துள்ளது.கடந்தாண்டை ஒப்பிடும் போது, இந்தாண்டு இந்த மாதம் இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. விவசாயிகள், இனி வியாபாரிகளிடம் போராடி நல்ல விலையை பெற முயற்சிக்க வேண்டும்.இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 20 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.ஒரு டன் இளநீரின் விலை, 7,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இளநீரின் விலை இனி தொடர்ந்து உயரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
2 minutes ago
3 minutes ago
4 minutes ago
4 minutes ago
5 minutes ago