உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரவில் விதிமீறி போர்வெல் பணி

இரவில் விதிமீறி போர்வெல் பணி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், குடியிருப்பு வீடுகளில், குடிநீர் தேவைக்காக, போர்வெல் அமைக்கப்படுகிறது. இதற்காக, நில உரிமையாளர்கள், 15 நாட்களுக்கு முன் உள்ளாட்சி அமைப்பில், அனுமதி வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், எவ்வித விதிமுறையையும் பின்பற்றாமல், இரவு நேரங்களில் 'போர்வெல்' அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதுடன், கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி