உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கள்ளச்சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

கள்ளச்சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

பெ.நா.பாளையம்; கள்ளச்சாராய விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய காரமடை வல்லரசு, 23, என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அந்நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வல்லரசு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ