உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஜனாதிபதி விருது பெற்ற ஊராட்சியில் அள்ளப்படாத குப்பையால் நோய்

 ஜனாதிபதி விருது பெற்ற ஊராட்சியில் அள்ளப்படாத குப்பையால் நோய்

கோவில்பாளையம்: கீரணத்தம் ஊராட்சி யில் மலை போல் குவிந்த, குப்பையால் மக்கள் தவிக்கின்றனர். குரும்பபாளையத்தை அடுத்த காப்பி கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து, கீரணத்தம் செல்லும் வழியில் பண்ணாரி அம்மன் நகர் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த வழித்தடத்தில் சாலையை ஒட்டி, லோடு கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது. பண்ணாரி அம்மன் நகர் மக்கள் கூறுகையில், 'தனியார் நிறுவனத்தினர், ஊராட்சி ஊழியர்கள் என பலரும் இங்கு குப்பை கொட்டுகின்றனர். இந்த குப்பையை நாய்கள் கிளறுகின்றன. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்தப் பாதையில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து கீரணத்தம் ஊராட்சி அலுவலகத்திலும், எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கீரணத்தம், கடந்த ஆண்டு சிறந்த ஊராட்சி என, ஜனாதிபதி விருது பெற்றுள்ளது. ஆனால் குப்பையை அகற்றாமல் மக்களை நோய் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது, ஊராட்சி நிர்வாகம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை