உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 9 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

9 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

மேட்டுப்பாளையம்; காரமடையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து மக்கள் கட்சி சார்பில் 26ம் ஆண்டாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தாண்டு 9 சிலைகள் காரமடையின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் நேற்று காரமடை கிருஷ்ணர் கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் தண்டபானி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமுகனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !