உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் மேலாண்மை மன்றம் துவக்கம் 

மாணவர் மேலாண்மை மன்றம் துவக்கம் 

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், மாணவர் மேலாண்மை மன்ற துவக்க விழா நடந்தது. கல்லுாரி இயக்குனர் (பொ) சர்மிளா வரவேற்றார். தொடர்ந்து, மாணவர் மேலாண்மை மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பொறுப்புகள், திறம்பட செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.பொள்ளாச்சி இளம் தொழில் முனைவோர் பள்ளி துணைத் தலைவர் சிவசபரிகண்ணன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''தொழில்முனைவோர் எப்போதும் குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு செயலையும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடணும் செய்தால் மட்டுமே தொடர்ச்சியான வெற்றி கிடைக்கும். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். இதற்கான ஏற்பாடுகளை, சிவஞானசெல்வகுமார் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ