உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இடைவிடாது பெய்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடைவிடாது பெய்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறை: வால்பாறையில் இடைவிடாமல் பெய்யும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வால்பாறையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்கிறது. நேற்று பகல் முழுவதிலும் இடைவிடாமல் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். சுற்றுலா பயணியர் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): பரம்பிக்குளம் - 33, ஆழியாறு - 15, வால்பாறை - 3, மேல்நீராறு - 7, காடம்பாறை - 3, மேல் ஆழியாறு - 11, சர்க்கார்பதி - 33, துாணக்கடவு - 21, பெருவாரிப்பள்ளம் - 15, நவமலை - 15 என்ற அளவில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ