மேலும் செய்திகள்
காய்கறி விலை சரிவு விவசாயிகள் அதிர்ச்சி
31-Dec-2024
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், காய்கள் மற்றும் வாழைத்தார்கள் ஏல முறையில் விற்பனையாவதால், விவசாயிகள் இங்கு தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.தற்போது மார்க்கெட்டில், தக்காளி (15 கிலோ பெட்டி) -200, தேங்காய் (ஒன்று) - 25, கத்திரிக்காய் - 15, வெண்டைக்காய் -- 20, முள்ளங்கி,- 20, வெள்ளரிக்காய் -- 25, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 13, பாகற்காய் -- 30, புடலை -- 25, சுரக்காய் -- 10, பீர்க்கங்காய் -- 50, பீட்ரூட் -- 30, அவரைக்காய் -- 30, பச்சை மிளகாய் -- 32 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த வாரத்தை விட தற்போது தக்காளி (15 கிலோ பெட்டி) - 10, சுரக்காய் மற்றும் பீர்க்கங்காய் - 10, கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், பீட்ரூட் ஆகிய காய்கள் விலை, 5 ரூபாய் மற்றும் அவரைக்காய் 30 ரூபாய் விலை குறைந்துள்ளது.மேலும், வெள்ளரிக்காய் மற்றும் புடலை 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.வியாபாரிகள் கூறியதாவது:மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட நேற்று தக்காளி வரத்து கூடுதலாக இருந்தது. இம்மாத முதலில், தக்காளி விலை குறைவாக இருந்தது. அந்த பத்து நாட்களாக தக்காளி (15 கிலோ பெட்டி) 210 ரூபாய்க்கு விற்பனை ஆனது.ஆனால் தற்போது பத்து ரூபாய் விலை குறைந்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விவசாயிகள் பலர் கவலையடைந்துள்ளனர். மேலும், விலை ஏற்றமடையும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு, தெரிவித்தனர்.
31-Dec-2024