உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு; வியாபாரிகள் வருகையால் விலையும் உயர்வு

சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு; வியாபாரிகள் வருகையால் விலையும் உயர்வு

உடுமலை; உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் உயர்ந்து வருகிறது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து, விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர். இப்பகுதிகளில், ஏறத்தாழ, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அறுவடை துவங்கியுள்ளது. இதனால், உடுமலை நகராட்சி சந்தைக்கு இதன் வரத்து அதிகரித்து, சீசன் துவங்கியுள்ளது. வழக்கமாக, 10 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து இருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களாக, 30 ஆயிரம் முதல், 40 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்படுகிறது. வழக்கமாக, உடுமலை சந்தைக்கு, ஜூலை இறுதியில் தக்காளி வரத்து துவங்கி, செப்., - அக்., வரை வரத்து சீசன் காலமாக இருக்கும். நடப்பாண்டும், சாகுபடி பரப்பு மற்றும் வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி சாகுபடி, பிற பகுதிகளில் குறைந்துள்ள நிலையில், உடுமலை சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம் மூணாறு, மறையூர் பகுதியிலிருந்து வியாபாரிகளும் அதிகளவு வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். சந்தையிலுள்ள கமிஷன் கடைகள் வாயிலாக, ஏல முறையில், காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, ரூ.500 ரூபாய்க்கு விற்பனையானது. ரூ.450க்கு விற்பனையான நிலையில், ஒரே நாளில், 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. பிற பகுதிகளிலிருந்து தக்காளி வரத்து இல்லாததால், உடுமலை சந்தையில் இவற்றின் விலை தொடர்ந்து உயரும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை