உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காபி விளைச்சல் அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

காபி விளைச்சல் அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

வால்பாறை : வால்பாறையில் காபி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், காபி மட்டும் 4,517 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு காபி செடிகளில் முன் கூட்டியே காய்க்க துவங்கியுள்ளன. இதனால், காபி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது,'வால்பாறையில், தேயிலைக்கு அடுத்தபடியாக காபி பயிரிடப்பட்டுள்ளது. ரொபஸ்டா, அரபிக்கா காபி வகைகள் இங்குள்ள பல்வேறு எஸ்டேட்களில் பயிரிடப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் காபி செடிகளில், பூப்பிடித்து, காய்கள் காய்க்கத்துவங்கும். நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை முதிர்ந்த காய்கள் அறுவடை செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை