உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைக்கொம்பு நாகூரில் ஒருங்கிணைந்த கிராமிய முகாம்

வாழைக்கொம்பு நாகூரில் ஒருங்கிணைந்த கிராமிய முகாம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி சமூகப்பணித்துறை சார்பில், ஒருங்கிணைந்த கிராமிய முகாம் நடந்தது.பொள்ளாச்சி அருகே, வாழைக்கொம்பு நாகூரில், சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் முதுகலை சமூகப்பணித்துறை சார்பில், ஒருங்கிணைந்த கிராமிய முகாம் நடந்தது. முகாம் துவக்க விழாவுக்கு, கல்லுாரி தலைவர் சேதுபதி தலைமை வகித்தார்.கிராமிய முகாம் குறித்து, சமூகப் பணித்துறை தலைவர் அன்புச்செல்வி பேசினார்.கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாஷா பேசினார். ஊராட்சி தலைவர் சத்தியபானு பேசினார்.இரண்டாவது நாளாக திடக்கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடு, வாரியாக மதிப்பாய்வு நடந்தது. வாழைக்கொம்பு நாகூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு, 'வாழ்க்கை திறன் கல்வி' குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அறம் அறக்கட்டளை மதன்குமார் பேசினார்.தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சந்தோஷ், கல்லுாரியின் துணை முதல்வர் செல்வின் பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை