உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

பொள்ளாச்சி ; கோர்ட் உத்தரவுப்படி, பொள்ளாச்சி சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தனி நபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.ஆக்கிரமிப்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு, குழு அமைத்து இடம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ்களை வழங்கினர். எனினும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாத நிலை இருந்தது.கடந்த, 9ம் தேதி பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, பல்லடம் ரோடு, மீன்கரை ரோடு, கோட்டூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், 'பொக்லைன்' உதவியுடன் தற்காலிக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பல முறை எச்சரிக்கை விடுத்தும், நோட்டீஸ் வழங்கியும் எடுக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரோட்டை ஆக்கிரமித்து இருந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அகற்றப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை