உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைப்பாதையில் மரக்கிளை வெட்டி அகற்றும் பணி தீவிரம்

மலைப்பாதையில் மரக்கிளை வெட்டி அகற்றும் பணி தீவிரம்

வால்பாறை: வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால், பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், பாறைகள் உருண்டும், மண்சரிவு ஏற்பட்டும் பாதிப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவற்றை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். தற்போது, வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ள நிலையில் மலைப்பாதையில், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடிகள், மரக்கிளைகள் வெட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.மலைப்பாதையில் மேற்கொள்ளப்படும், வடகிழக்குப் பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடி கொடிகள், ஆபத்தான மரக்கிளைகள், சிறிய அளவிலான பாறைகள் அகற்றப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தயார் நிலையில் உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை