உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம்! சிறப்பு முகாமில் குவிந்தன விண்ணப்பங்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம்! சிறப்பு முகாமில் குவிந்தன விண்ணப்பங்கள்

- நிருபர் குழு -பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களில், 6,328 பேர் விண்ணப்பங்கள் வழங்கினர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம், 29ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் கடந்த இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது.பெயர் சேர்க்க, படிவம் - 6 பூர்த்தி செய்து 1,625; பெயர் நீக்கத்துக்கு படிவம் - 7 பூர்த்தி செய்து, 482; வாக்காளர் அட்டையில் திருத்தம், தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் - 8 விண்ணப்பம் பூர்த்தி செய்து, 1056 பேர், என மொத்தம், 3,163 பேர் விண்ணப்பங்கள் வழங்கினர்.அதே போன்று, வால்பாறை தொகுதியில் படிவம் - 6, 1,377 பேர்; படிவம் - 7, 496 பேர்; படிவம் - 8, 1062 பேர், என மொத்தம், 3,165 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.வரும், 23 மற்றும், 24ம் தேதிகளில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களிலும், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன, என, வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலை

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்த பணிகள் மேற்கொள்ளும் வகையில், உடுமலை தொகுதியில், 129 ஓட்டுச்சாவடி மையங்களில், 294 ஓட்டுச்சாவடிகளிலும், மடத்துக்குளம் தொகுதியில், 119 ஓட்டுச்சாவடி மையங்களில், 287 ஓட்டுச்சாவடிகளிலும், கடந்த, 16 மற்றும் 17 ம் தேதி சிறப்பு முகாம்கள் நடந்தன.இதில், புதிய வாக்காளர்களாக இணைய, இரு நாட்களில், உடுமலை தொகுதியில், 181 பேரும், மடத்துக்குளம் தொகுதியில், 150 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அதே போல், பெயர் நீக்கம் செய்ய, முகாம்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக, உடுமலை தொகுதியில், 429 பேரும், மடத்துக்குளம் தொகுதியில், 177 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள, உடுமலையில், 129 பேரும், மடத்துக்குளத்தில், 62 பேரும் விண்ணப்பித்துள்னர். இரு நாட்கள் நடந்த முகாம்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, உடுமலை தொகுதியில், 2,314 பேரும், மடத்துக்குளத்தில், 1,579 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ள, இம்மாதம், 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட முகாம், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும், 23 மற்றும், 24ம் தேதி நடக்கிறது.மேலும், https://voters.eci.gov.in/ என்ற இணைய தளம் வாயிலாகவும், Voters Help Line App என்ற மொபைல் செயலி வாயிலாகவும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி