உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் : தமிழக மாணவர்கள் பதக்க வேட்டை

சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் : தமிழக மாணவர்கள் பதக்க வேட்டை

கோவை: சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக மாணவர்கள் பதக்கங்களை குவித்தனர்.புதுச்சேரியில் உலக அளவிலான சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. போட்டியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவங்கி வைத்தார்.இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, நேபாளம், பூடான் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 6 வயது முதல், 21 வயது வரை உள்ள மாணவ - மாணவியர், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தனித்திறன் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வால், மான் கொம்பு, ஈட்டி தொடுமுறை சிலம்பம் என நான்கு பிரிவுகளில், 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டியில் கோவை, சீரநாயக்கன்பாளையம் பீஷ்மர் குருகுலம் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ - மாணவியர் கலந்து கொண்டு, 53 தங்கப் பதக்கங்களையும், 29 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை