உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கு

வேளாண் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கு

கோவை : கோவை வேளாண் பல்கலையில், இங்கிலாந்தின் டீசைட் பல்கலையுடன் இணைந்து, 'இங்கிலாந்து- இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டம்' (யு.கே.ஐ.இ.ஆர்.ஐ.,) --- ஸ்பார்க் திட்டத்தின் கீழ், சர்வதேச கருத்தரங்கு நடந்தது.வேளாண் பொறியியல் கல்லூரி சார்பில், 'வேளாண் மின்அழுத்தம் மற்றும் விவசாயத்தில் நீடித்த தன்மை' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், டீசைட் பல்கலை பேராசிரியர் செந்திலரசு சுந்தரம், கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்து பேசினார். கருத்தரங்கில், வேளாண் மின்னழுத்த தொழில்நுட்பங்கள், விளைச்சலை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், 20 நிபுணர்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர். பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, டீன் ரவிராஜ், பேராசிரியர்கள் மகேந்திரன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை