உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜிவாந்தா சொகுசு வில்லாக்கள் மகேஸ்வரி டெவலப்பர்ஸ் அறிமுகம்

ஜிவாந்தா சொகுசு வில்லாக்கள் மகேஸ்வரி டெவலப்பர்ஸ் அறிமுகம்

கோவை: அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 'ஜிவாந்தா' சொகுசு வில்லாக்களை, மகேஸ்வரி குழுமத்தின் அங்கமான மகேஸ்வரி டெவலப்பர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. கோவை, சரவணம்பட்டி மேம்பாலம் செட்டி தோட்டத்தில் அமைந்துள்ள வில்லாக்களை, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் திறந்து வைத்தார். மகேஸ்வரி குழும நிறுவனர் கார்த்திக் சுந்தரசாமி கூறுகையில், ''முழுமையான தானியங்கி வில்லாக்கள், சர்வதேச தரத்துக்கு இணையான, சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. வில்லாக்களை சுற்றி, பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், ஐ.டி., அலுவலகங்கள், மால்கள், ஓட்டல்கள் அமைந்துள்ளன. முதலீட்டாளர்கள், ஐ.டி., ஊழியர்களுக்கு ஏற்றது. வில்லாக்களில் மோஷன் சென்சார் லைட்டிங், தண்ணீர் கசிவை கண்டறியும் சென்சார், தானியங்கி தண்ணீர் சூடாக்கும் இயந்திரங்கள், காபி மேக்கர், ஓவன், நியூமேடிக் பம்ப் முறையில் தண்ணீர் வழங்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன,'' என்றார். கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளைத்தலைவர் ராஜேஸ் லுந்த், அகில இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கார்த்திக், கிரெடாய் கோவை தலைவர் அரவிந்த், மகேஸ்வரி டெவலப்பர்ஸ் தலைமை செயல்பாட்டு அலுவலர் நிதின் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை